Mercal at the top of the box office beyond the discretion ...
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள படம் மெர்சல்.
அப்பப்பா! இந்த படத்துக்கு எவ்வளவு தடைகள. அத்தனை தடைகளையும் தாண்டி நேற்று தீபாவளியன்று இந்தப் படம் வெளியானது.
மெர்சல் குறித்து ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் வெளியான படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
சென்னை பாக்ஸ் ஆபீஸில் மெர்சல் படம் முதல் நாளில் மட்டும் 1.52 கோடி வசூல் செய்துள்ளது. அந்த அளவுக்கு படத்தின் மீது மக்கள் எதிர்பார்ப்பு இருந்துள்ளது.
முன்னதாக, விவேகம் 1.21 கோடியும், கபாலி 1.12 கோடியும் வசூல் செய்ததே அதிக வசூலாக இருந்தது. மெர்சல் படம் விவேகம் படத்தையும் பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தில் உட்கார்ந்து கொண்டு கர்ஜிக்கிறது.
ஆனால், இது தொடக்க மட்டுமே. இன்னும் பல சாதனைகலைப் மெர்சல் படைத்தது மிரள வைக்கும்.
