meloor couples wrote letter to rajini to send danush
நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதி, நடிகர் ரஜினி காந்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில்மனு தாக்கல்செய்தனர்.
இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி நடிகர் தனுஷ்,சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம்,மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.
நடிகர் தனுசும் ஆஜரானார். அவரின் அங்க அடையாளங்களை சோதனை செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
ரஜினிக்கு கடிதம்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது, தன்னுடைய ரசிகர்களுடன் மூன்றாவது நாளாக சந்தித்து வருகிறார்.இவருடைய மருமகனான தனுஷ் தான், கலைச்செல்வன் என்ற எங்கள் மகன் எனக்கூறிக்கொண்டு,தனுஷை தங்களிடம் அனுப்பி வையுங்கள் என மேலூர் தம்பதி, கோரிக்கை மடலை ரஜினிகாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
