’ஜோக்கர்’ என்ற தரமான படம் தந்துவிட்டு தன்னையே ஒரு மேடையில் கலாய்த்துக்கொண்டு அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.

 ரங்கராஜ், பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகும் ஸ்வேதா திரிபாதி, நடிகர்கள் விக்னேஷ்காந்த், மாரிமுத்து, சன்னிஜி நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் வெளியாகவிருக்கும் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் ராஜூமுருகன் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா  நேற்று சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநரின் படத்துக்கு இவ்வளவு வி.ஐ.பி. விருந்தினர்களா என்று வியக்குமளவுக்கு நடிகர் சிவகுமார் இயக்குநர்கள் பாக்கியராஜ், கரு.பழனியப்பன், லெனின் பாரதி ,மாரி செல்வராஜ்  என்று பலரும் கலந்துகொண்டு இயக்குநர் சரவண ராஜேந்திரனை வாழ்த்தினர். இவ்வளவு பாராட்டப்பட்ட ராஜேந்திரன் இயக்குநர் ராஜு முருகனின் உடன்பிறந்த சகோதரர்.

தனது அண்ணனின் இயக்கம் குறித்து பெருமை பொங்கப்பேசிய ராஜூ முருகன், ‘"பொதுவா சினிமா, அரசியல் என்ற சர்க்கஸ்களில் மாஸ்டர்கள் பின்தங்கிவிட்டு, பபூன்கள் முன்னேறிவிடுவதுபோல நான் வந்து முதல்ல படம் பண்ணிட்டேன். எனக்கு முன்னாடியே சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்தவர் சரவணன் அண்ணன். ஆனால், மாஸ்டர்கள் நீடித்து நிற்பார்கள், பபூன்கள் சீக்கிரம் காலியாகிவிடுவார்கள். என் அண்ணனும் கண்டிப்பாக நிலைத்து நிற்பார் என நம்புகிறேன்" என்று பெருந்தன்மையாக தன் அண்ணன் குறித்து குறிப்பிட்டார்.