தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் முதல் முதலில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிக்க துவங்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இவர் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது.

சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம், எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும்  சமீபத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக இவர் நடித்து திரைக்கு வந்த பூமராங் படம் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் மேகா ஆகாஷ்  விழா ஒன்றில் கலந்து கொண்ட போது,  அஜித், விஜய், தல தோனி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் "அஜித்தை நேரில் பார்த்தால் 'எப்படி இவ்ளோ ஹண்ட்ஸமாக இருக்கிறீர்கள்?' என கேட்பேன். விஜய்யை நேரில் பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லி கொடுங்கள் என கேட்பேன். தல தோனியை நேரில் பார்த்தால் ஸ்டரைட்டா 'ஐ லவ் யூ' என்று உடனே கூறிவிடுவேன்" என மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். இவரின் பதில் ரசிக்கும்படியாக உள்ளது ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.