பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது.

எனினும் சிரஞ்சீவி சர்ஜாவின் வாரிசை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கி காத்திருந்தனர் குடும்பத்தினர். குறிப்பாக தன் அண்ணன் மீது உயிரையே வைத்திருந்த துருவ் சர்ஜா அண்ணன் குழந்தைக்காக, 10 லட்சத்தில் வெள்ளி தொட்டில் ஒன்றையும் வாங்கியிருந்தார். 

இந்நிலையில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவிற்கு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி, அழகிய ஆண் பிறந்தது. தற்போது இவரது குடும்பத்தினர் குழந்தையை செல்லமாக சிட்டு என்றே அழைத்து வருகிறார்கள். மேலும் குழந்தை பிறந்ததை, மீண்டும் சிரஞ்சீவி சர்ஜா, மறுபிறவி எடுத்து போல் இந்த சந்தோஷத்தை குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது சிரஞ்சீவி சர்ஜாவி வாரிசை தொட்டிலில் போடும் விஷேசம் மேக்னா ராஜின் பெற்றோர் வீட்டில் நடந்துள்ளது. மிக சிறப்பாக நடந்த இந்த விசேஷத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாக பலர், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.