mega mathew about her accident

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை மேகா மேத்யூ, கடந்த ஓரிரு தினத்திற்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். ஒரு மணிநேரம் காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை ஒரு பத்திரிக்கை புகைப்பட கலைஞர் மீட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது சற்று உடல் நலம் தேறியுள்ள மேகா, தனக்கு நடந்த விபத்து குறித்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில். "என்னுடைய அண்ணனின் திருமண நிச்சயதார்த்திற்கு சென்ற போது தான் இந்த விபத்து நடந்தது. என் கார் மீது மோதிய கார், நான் என்ன ஆனேன் என்பதை பற்றி கவலைப்படாமல் நிற்காமல் சென்று விட்டது. 

தலைகீழாக கவிழ்ந்த காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தேன். கைகால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இறந்து விடுவேன் என முடிவுக்கு வந்து விட்டேன்.

என் காரை சுற்றி பலர் என்னை வேடிக்கை பார்த்தனர் ஆனால் ஒருவர் கூட நான் படும் வேதனையை பார்த்து என்னை காப்பாற்ற வரவில்லை. பலர் என்னை செல்போனில் போட்டிபோட்டு படம் எடுத்துக்கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு போட்டோகிராபர் வந்து தான் என்னை காப்பாற்றினார். செல்போன் மோகத்தால் மனிதாபிமானத்தை மறந்து ஒரு உயிர் வேதனையோடு அழுவதை படம்பிடித்ததாக மேகா மேத்யூ கூறியுள்ளார்.