இயக்குநர் பாலாஜி தரணிதரனின் 'ஒரு பக்க கதை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தவர் நடிகை மேகா ஆகாஷ். 
இந்தப் படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகை தனுஷுக்கு ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார். 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த இந்த இரு படங்களும், இன்னும் வெளியாகவில்லை. எனினும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் மாஸ் எண்ட்ரி கொடுத்த மேகா ஆகாஷ், பின்னர் அதர்வாவுடன் 'பூமராங்', சிம்புடன் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் நடித்தார். 

இதனைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட்டிலும் தடம்பதிக்கவுள்ளார் மேகா ஆகாஷ். ஆம், ஹிந்தியில் உருவாகியுள்ள 'சாட்டிலைட் சங்கர்' படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

சூரஜ் பஞ்சோலி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை, இர்ஃபான் கமல் இயக்கியுள்ளார். ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், 'சாட்டிலைட் சங்கர்' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ஹீரோயினாக ஜொலிக்க முடியாமல் தவிக்கும் மேகா ஆகாஷுக்கு, பாலிவுட் திரையுலகம் சிவப்பு கம்பவ வரவேற்பு அளிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்