தான் செத்து விட்டதாகவும், போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது.

தான் செத்து விட்டதாகவும், போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மீராமிதுன், தான் இறந்து விட்டதாகவும், போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Scroll to load tweet…

மீராவே இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.