பிக்பாஸ் நிகழ்ச்சியில், 16 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடியவர் மீராமிதுன்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில், 16 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடியவர் மீராமிதுன். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, இனி பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா? என அனைத்து ரசிகர்கள் மனதிலும் இருந்த கேள்விக்கு, புது புது பிரச்சனைகள் மூலம் தீனி போட்டவர் மீரா.

இவருக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் எதிராக இருந்தாலும், இவர் செய்து வரும் பிரச்சனைகள் நியாயமானது தான் என இவருக்கு சப்போர்ட் செய்யும் ஒரு தரப்பும் இருந்து கொண்டு தான் உள்ளது. 

இந்நிலையில், இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என எதிர்பார்த்த நிலையில், திடீர் என வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் உள்ளேயே இருந்து வெற்றி பெரும் போட்டியாளர் யார் என எழுப்பப்பட்ட கேள்வி, சாண்டி தான் வெற்றி பெறுவார் என்றும், தர்ஷனுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது, ஆனால் அவருக்கு எது சரி, எது தவறு என புரிந்து கொள்ளும் முதிர்ச்சி வரவில்லை என கருதுவதாக கூறியுள்ளார்.