பிரபல மாடலும், அழகி பட்டமும் வென்று, ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் மீரா மிதுன். எப்போது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வாண்ட்டடாக  சென்று பல வம்புகளில் சிக்கும் இவர், தற்போது நித்தியானந்தா குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் நித்தியானந்த எழுதிய Living Enlightenment என்கிற புத்தகத்தை பற்றி மீரா மிதுன் கூறியுள்ளார்.

இந்த அற்புதமான புத்தகத்தை தான் பிடித்ததாகவும் . அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என கூறி தான் படித்தவற்றை பற்றி விளக்கி கூறியுள்ளார்.

மேலும், இந்த நாளில் முடிவில், நான் சமாதானமாக இருக்கிறேன், ஏனென்றால் என் நோக்கங்கள் நல்லவை, என் இதயம் தூய்மையானது என கூறி இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மீரா மிதுன் நல்ல விஷயத்தையே கூறி இருந்தாலும், நெட்டிசன்கள் ரியாக்ஷன் அவருக்கு எதிரியாகவே உள்ளது. எப்போது போல இந்த வீடியோவிற்கும் கண்டமேனிக்கு விமர்சனங்கள் பறக்கிறது.

அந்த வீடியோ இதோ...