பிரபல மாடலாக அனைவராலும் அறியப்பட்டு, டான்ஸ் நிகழ்ச்சி மற்றும், 8 தோட்டாக்கள், போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வர தொடங்கினார். 

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். 


அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். போர் அடிக்கும் இந்த சூழலை சமாளிப்பதற்காக, சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் மீரா மிதுன்.

அப்போது ரசிகர்கள் சமீபத்தில் இவருடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது பற்றி கேட்கையில், "எனக்கிருக்கும் இந்த தைரியம் வேறு நடிகைகளுக்கு இல்லை. இது போன்று நடந்தால் மற்ற நடிகைகள் பயப்படுவார்கள் என்னால் அப்படி இருக்க முடியாது. என்னை பார்த்து பல பெண்கள் இது போன்ற விவகாரத்திலுருந்து வெளியே வர வேண்டும் அதற்காகத்தான் வெளியிட்டேன்.  மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் எனக்கிருக்கும் புகழ் மற்ற நடிகைகளுக்கு இல்லை. அதனாலேயே எனக்கு எதிராக அவர்கள் சதி செய்கிறார்கள். அவற்றை உடைத்து நிச்சயம் வெளியில் வருவேன் என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.