பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியபோது, ஹவுஸ் மேட்ஸ் பலர் இவரை எதிரியாகவே பார்த்தனர்.

இவர் எவ்வளவு தான், அனைவரிடமும் பேசி, பழக முயன்ற போதும் இவரால் எளிதில் அவர்களிடம் நெருங்க முடியவில்லை. பின் கிராமத்து டாஸ்க் நடந்த போது, லாஸ்லியாவின் கையில் இருக்கும் செம்பை வாங்க துரத்தி சென்ற சேரன், மீராவை தள்ளுவதற்க்காக அவருடைய இடுப்பில் கை வைக்க, இதை வைத்து ஒரு பெரிய பிரச்சனையே செய்து விட்டார் மீரா.

இவர் நடந்து கொண்ட விதம், ஒட்டு மொத்த மக்களின் கோபத்தையும் இவர் மீது திரும்பும் படி செய்தது. இதனால் யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்த வெளியேற்றப்பட்டார் .

இது புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் வெளியேயும், இவருக்கு பல பிரச்சனைகள். பிரபல தனியார் நிறுவனத்தின் தலைவர் 'ஜோ மைக்கேல்' என்பவர் மீரா மீது மோசடி புகார், மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.

'ஜோ மைக்கேல்' குறித்து கேள்வி எழுப்பிய போது, மீராவும் அவர் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்து கூறி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்த பிரச்சனை குறித்து ஊடகம் ஒன்றில் பேசிய மீரா, மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பேசி 'ஜோ மைக்கேலை' சரமாரியாக அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில் மீரா, மோசமான வார்த்தையால் ஜோ மைக்கேலை மிரட்டும் தொனியில், இந்த மாதிரியிலாம் சொல்லி ப்ளாக் மெயில் பண்ணி பயப்புடுறதுக்கு, நான் ஒன்னும் ஊறுகா கிடையாது, சாதாரணமான பொண்ணு கிடையாது. நீ என்ன விடணும்னு நினைக்கிறியோ அதை விடு, நாளைக்கு நான் தப்பு பண்ணுற வீடியோ இருக்குனு சொல்லுவ அதையும் விடு நானும் உட்காந்து பாக்குறேன்.

நீ என்ன  கயிட்டமுடியுமோ கயிட்டு, நாயே உன்கிட்ட நான் ஏன் மன்னிப்பு கேட்கணும். ஒரு பொண்ணுகிட்ட மோதாமல் போய் பொழப்ப பாக்குற வழிய பாருங்க. உனக்கு என்ன வேல நடக்குனுமோ போய் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வேலைய பாரு. என மோசமாக விமர்சித்து பேசியுள்ளார். இதனை ஒரு பக்கம் நெட்டிசன்கள் விமர்சிக்க மற்றொரு புறம் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.