கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று புதுசா என்ட்ரி கொடுத்தார் மாடல் அழகியான மீரா மிதுன்.

மீரா மிதுன் வருகையின்போது, பிக்பாஸ் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். வந்தவுடன் அவருக்கு உண்ண உணவும் கொடுத்தனர். ஆனால் மீரா மிதுன் வருகை சக போட்டியாளரான அபிராமி மற்றும் சாக்ஷிக்கு பிடிக்காத தோனி காணப்பட்டது. எப்படியாவது வந்த வேகத்தில் அவரை துரத்த வேண்டும் என திட்டமிடுவது நன்றாகவே தெரிகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால்  ஒரு சின்ன டார்கெட் கொடுக்கிறார் பிக்பாஸ்.

அதன்படி போட்டியாளர்களின் திறமையை அறிந்து, அதனை அவர்கள் முன் எடுத்துரைக்க வேண்டும் என்பதே.. அவ்வாறாக ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றியும் தொடர்ந்து பேசிவந்த மீரா மிதுன், அபிராமி மற்றும் சாக்ஷி இருவரிடம் வரும்போது எந்த ஒத்துழைப்பும் தராமல் சாரி என கூறி விடுகின்றனர். பின்னர் அடுத்து அமர்ந்திருந்த இயக்குனர் சேரனிடம் சென்ற மீரா, உடனடியாக அவரைக் கட்டிப் பிடிக்க இரண்டு கையை தூக்க இதைப் பார்த்து அரண்டு போய் பார்க்கிறார் இயக்குனர் சேரன். என்னம்மா இது? என கேள்வி கேட்க... அதற்கு பதிலளிக்கும் விதமாக மீரா மிதுன், கமல் சார் சொன்ன கட்டிப்பிடி வைத்தியம் இது என கூறுகிறார்.\

அதற்கு அடுத்த பதிலாய் சேரன் கூறுவது... "இது கமல் சார் சொன்னது அல்ல.... சினேகன் சொன்னது என அவரே சொல்லி குலுங்கி சிரிக்கிறார். இந்த காட்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற காட்சிகளில் இருந்து ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.