பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோ வெளியானதில் மீரா மிதுன் அழும் காட்சி இடம் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

16 ஆவது போட்டியாளராக மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதிலிருந்தே, மற்ற போட்டியாளர்களுக்கு குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்கு ஒரு பொறாமையை ஏற்படுத்துவது போன்ற ஒரு காட்சியை பார்க்க முடிந்தது.

இதற்கு அடுத்த படியாக, நேற்று நிகழ்ச்சியின் மூன்றாவது நாள் நிகழ்வுகளை ஒளிபரப்பப்பட்டது. அதில் வனிதா விஜயகுமாரின் பேச்சு அனல் பறக்கும் விதத்தில் அமைந்திருந்தது. காரணம் பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்திய கப்பை யாரோ ஒருவர் சுத்தம் செய்யாமல் டேபிள் மீது வைத்து உள்ளனர். யார் இதை இப்படி செய்தார்கள்..? ஏன் எடுத்து சுத்தம் பண்ண வில்லை? என அபிராமி தொடர்ந்து கத்திக்கொண்டே கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மீரா மிதுன் calm down, calm down என சொல்கிறார். இதற்கு அபிராமி, "நான் உன்னிடம் கேட்கவில்லை... பொதுவாக தான் சொன்னேன்.. நீ எதற்கு மூக்கை நுழைக்கிறாய்" என கோபப்பட்டு இருவரும் பேசிக் கொள்கின்றனர். 

இந்த பஞ்சாயத்தை தற்போது பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக இருக்கும் வனிதாவிடம் சொல்கின்றனர். அதற்கு வனிதா அபிராமியை சமாதானப்படுத்துகிறார். அதற்கு முன்னதாக மீரா மிதுனிடம், "நீ ஏன் கேட்கிறாய் உன்னை குறிப்பிட்டுச் சொன்னால் மட்டுமே, நீ பதில் அளித்து இருக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வணிதாவிடமும் தொடர்ந்து "காம் டவுன்..காம் டவுன்" என மீரா மிதுன் சொல்லவே வனிதாவும் டென்ஷன் ஆகிறார். பின்னர் அழ தொடங்கினார் மீரா மிதுன் 

மேலும் மீரா மிதுனுக்கு ஆதரவாக, பாத்திமா பாபு ஆறுதல் கூறுகிறார். இந்த நிலையில் தான் மீரா மிதுன் அழுதுகொண்டே பாத்திமாபாபுவிடம் பேசுகிறார். அதில், "எனக்கு வாழ்க்கையிலே பிடிக்காததே என் மீது மற்றவங்க பொறாமை படுவதே ..அது ரொம்ப கஷ்டம் மேடம்... அவங்க எதுக்கு பேசுறாங்க.. என்ன பேசுறாங்க.. என சொல்லிக்கொண்டே அழுகிறார் மீரா மிதுன். இந்த பிரமோவால் இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.