பிக்பாஸ் வீடு ஆரம்பத்தில் ஆனந்தம் படத்தில் வரும் வீடு போல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விதவிதமான பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் வீடு ஆரம்பத்தில் ஆனந்தம் படத்தில் வரும் வீடு போல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விதவிதமான பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தற்போது, வெளியாகியுள்ள ப்ரோமோவில் இத்தனை நாள் மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போட்ட மீரா மிதுன் தற்போது, நடிகர் கவினிடம் சண்டை போடுகிறார். 

"ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னு ரூல் இருக்குல்ல, ரூல்ஸை முதலில் ஒழுங்காக படி என கவின் கூற, நான் மறைமுகமாகத்தான் ஹெல்ப் செய்தேன் என்று மீரா பதிலளிக்க அதற்கு மீண்டும் கவினுடன் சண்டை போடுகிறார்.

எதிர்பார்த்தது போலவே கவினுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களிடையே ஆதரவு குவிய, மீராமிதுன் தனிமைப்படுத்தப்பட்டார். ஒருகட்டத்தில் மோகன் வைத்யாவை மீரா எதிர்த்து பேச, மோகன் பொங்கி எழுகிறார். வயது வித்தியாசம் இல்லாமல் பேசுகிறாய், வயசுக்கு மதிப்பு குடு என மோகன் டென்ஷனாக கத்த தொடங்கியதும் மீரா அமைதியாகிறார். 

உண்மையில் மீரா மிதுன் மீது தவறு இருக்கிறதா? அல்லது கவின் மீது தவறு உள்ளதா என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும்.

Scroll to load tweet…