பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் என்னென்ன புதிய பிரச்சனை வரும், என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், மீரா மிதுன், மோகன் வைத்தியாவை, தன்னுடைய உடையில் உள்ள ஹூக்கை போடும் படி கேட்டது பெரிய பிரச்சனையாக வெடித்தது.

மீரா சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, அவர் அணிந்துள்ள டாப்பின் ஹூக் அவிழ்ந்து விட, அதனை போட்டு விடுமாறு மோகன் வைத்தியாவிடம் கூறுகிறார். இதற்கு கையை கழுவி விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போய், பிக்பாஸ் வீட்டின் கேப்டன் வனிதாவிடம், மீரா தன்னை ஹூக் போட்டுவிடும் படி கூறுகிறார். இதில் தனக்கு உடன்பாடு இல்லை இதுபற்றி நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள் என கூறுகிறார். 

வனிதாவும் முதலில் மீராவிடம், இது குறித்து நல்ல விதமாக பேச முயன்றும், என்ன சொல்ல வருகிறார் வனிதா என காது கொடுத்து கூட கேட்காமல், அவர் தன்னுடைய அப்பா மாதிரி என, அந்த இடத்தில் இருந்து ஓடி விடுகிறார் மீரா. வனிதாவுக்கு இவரின் செயல் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

பின் இது ஒரு பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது. ஆனால் இது வரை மீராவிற்கு, இசை வித்துவான் தன்னை பற்றி, வனிதாவிடம் சொன்னது கூட தெரியாமல் வனிதா மீது தான் தவறு இருப்பதாக நினைத்து கொண்டு சண்டை போடு வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மீராவிற்கு துளியும் பொறுமை இல்லாதது என தெரிகிறது.