இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடத்தப்பட்ட, டிக்டாக்  டாஸ்க்கில் சாண்டியுடன் மீரா விளையாடியபோது, இவரின் பங்கு இல்லை என அனைவரும் நினைப்பதாக நினைத்து கவலை பட்டர். எனவே இதனை அவர், பிக்பாஸ் வீட்டின் தலைவர் சாக்ஷி மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட போது, சாக்ஷி மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்கிறேன் நீ இது குறித்து கூறு என சொல்கிறார்.

மீட்டிங் கூட்டிய பின்,இதை நான் ஏற்பாடு செய்யவில்லை என மீரா கூறியதும், ஒட்டு மொத்த போட்டியாளர்களின் கோபமும், மீரா மீது பாய்ந்தது. காரணம் மீரா சொன்னதால் தான் மீட்டிங் அரேஞ் செய்ததாக சாக்ஷி கூறுகிறார்.  மீரா தான் அப்படி சொல்லவில்லை என கூறியும் அதனை நம்பாமல்,  சாக்ஷிக்கு மட்டுமே  ஆதரவாக பேசுகிறார்கள்.

ஆனால், மீரா தன்னுடைய பேச்சில் உறுதியாக இருந்தார். இதனால், தற்போது அவருக்கு எதிராக குறும்படம் ஒன்று போட வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் நேற்றைய தினம் தொகுப்பாளர் கமலஹசனிடம் அறிவுறுத்துகிறார்கள்.

முதலில் மீட்டிங் கேட்டது, மீராவா அல்லது சாக்ஷியா என்பதை உறுதி செய்வதற்காக குறும்படம் போடப்பட்டது. அப்போது மீராவின் முகத்திரை கிழியும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சாக்ஷி தான் மீட்டிங் என்கிற வார்த்தையை பயன்படுத்தியது முதலில் தெரிய வந்தது. இதனால் அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் சாக்ஷி அசிங்கப்பட்டு தலை குனியும் சூழல் உருவானது.