பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் இதற்கு முன் கொடுத்த பேட்டியை போலவே, தற்போது மீரா மிதுனும் ஒவ்வொரு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் இதற்கு முன் கொடுத்த பேட்டியை போலவே, தற்போது மீரா மிதுனும் ஒவ்வொரு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில், மீரா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தன்னுடைய மேக்அப் செட்டை எடுத்து ஒளித்து வைத்து கொண்டதற்காக, ஒரு பிரச்சனை செய்தார். இது பார்க்கும் ரசிகர்களுக்கே மீரா வேண்டும் என்றே இது போன்ற பிரச்னையை செய்வதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மீரா, கடந்த முறை, அபி மற்றும் லாஸ்லியா இருவரும் ஜெயிலுக்கு சென்றதன் காரணன், அவர்களுக்கு பிக்பாஸ் திருட வேண்டும் என டாஸ்க் கொடுக்காமல் அவர்கள் திருடியது தான். அப்படி பார்த்தால் சாக்ஷி அடிக்கடி தன்னுடைய கம்மல், செருப்பு ஆகியவற்றை பர்சனல் காரணங்களை மனதில் வைத்து கொண்டு திருடினார்.

அதே போல் என்னுடைய மேக்அப் கிட்டையும் எடுத்து ஒளித்து வைத்து கொண்டனர். டாஸ்க் முடிந்த பிறகும் கொடுக்கவில்லை. பின் ரேஷ்மா தான் கவின் என்னுடைய மேக்அப் கிட்டை ஒளித்து வைத்திருப்பதாக கூறினார். கவினிடம் இதுகுறித்து கேட்ட போது, சாக்ஷி சொன்னதால் தான் செய்தேன் என தெரிவித்தார்.

இதனால் இது உனக்கே மிகவும் சீப்பா தெரியவில்லையா, சின்ன குழந்தை மாதிரி பர்சனல் காரணத்திற்கு இப்படி செய்வது என கேள்வி கேட்டேன் ஏன் கூறியுள்ளார்.