நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த நவம்பர் 22 -ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய போது அவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.

பின்னர் கடந்த மாதம் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் உருவாக்கத்திற்காக லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று நடிகர் அருண்விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது இவர் தற்போது ‘ஓ மை டாக்’ மற்றும் ஹரி இயக்கத்தில் யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அருண் விஜயை தொடர்ந்து நடிகை மீனா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மீனா குடும்பத்தினருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மீனா தனது குடும்பத்துடன் தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

