mayil samy open talk about her leader

ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் தன்னுடைய உடல் அசைவுகள், முக பாவங்கள், பல குரல்களில் பேசி காமெடி மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்துபவர் காமெடி நடிகர் மயில் சாமி.

சமீபத்தில் இவர் தனக்கு பிடித்த, தான் தலைவனாக ஏற்று கொண்ட ஒரு உயர்ந்த மனிதர் பற்றி மனம் திறந்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நான் இதுவரை தன்னுடைய தலைவனாக ஏற்றுக்கொண்ட மாமனிதர் அப்துல்கலாம் ஒருவர் தான். என அவரது பேரை சொல்லும் போதே அழ ஆரம்பித்து விட்டார்.

அப்துல் கலாமை பற்றி அவர் கூறுகையில், இவ்வளவு பெரிய பதவிகளை வகித்த மனிதர் இறக்கும் போது அவரது பேங்க் அக்கௌன்ட்டில் 2500 ருபாய் தான் இருந்தது என கேள்வி பட்டு இருந்தேன் என அவர் சொல்லும்போதே மற்ற வார்த்தை பேச முடியால் வாய் விட்டு அழுதார்.
இதன் காரணமாக தொலைக்காட்சியில் சிறிது நேரம் கழித்து அவர் சமாதானம் ஆன பிறகு நிகழ்ச்சியை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.