தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பட்டி தொட்டியெல்லாம் தாறுமாறு ஹிட்டான அசுரன் படம், தனுஷிற்கு பெரும் புகழை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து தமிழர்களின் பழங்கால தற்காப்பு கலையான அடி முறை பற்றி எடுக்கப்பட்ட பட்டாஸ் திரைப்படமும் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. அந்த படத்திலும் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் பின்னிபெடலெடுத்து தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்தார். 

இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "சுருளி" படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் சுருளி படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு கொண்டு வரும் வேலையில் மும்முரமாக இருக்கிறது படக்குழு. கர்ணன் படம் கூடிய விரைவில் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக சாரா அலிகான், அக்‌ஷய்குமார் உடன் இந்தி படம் ஒன்றில் கைகோர்த்துள்ளார். மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க உள்ள அந்த படத்திற்கு "அட்ரங்கி ரே" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் தனுஷின் 44 வது படத்தைப் பற்றிய அறிவிப்புகளை எதிர்நோக்கி இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. ஏற்கனவே மலையாள நடிகையான மஞ்சுவாரியார் உடன் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், இந்த படத்திலும் மலையாள நடிகை ஒருவரையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் பிரபல நடிகை நித்யாமேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு காம்பினேஷன் அமைந்தால் படம் செம்ம சூப்பராக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் டுவிட்டர் மேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.