தமிழ்நாட்டில் பிறந்து,  ஏராளமான தமிழ் படங்களில் நடித்து இந்திக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி.  30 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்த அவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபாய் சென்ற அவர் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். இது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

இதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவியின் வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப் போவதாக அவருடைய கணவர் போனிகபூர் அறிவித்தார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை எடுக்க உள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக உயர்ந்தது வரை அனைத்து விவரங்களையும் படத்தில் கொண்டு வருகின்றனர். இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கும், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமன்னா, ஹன்சிகா, உள்ளிட்ட பல நடிகைகள் ஸ்ரீதேவி ஆக நடிக்க விருப்பம் தெரிவித்தனர். 

மேலும் 'தி டர்ட்டி பிச்சர்' படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் பெயரும் அடிபட்டது. தற்போது பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.