பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது, மதுமிதா வெளியேறியதை உறுதி படுத்தும் விதமாக ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் அவர் கையில் உள்ள கட்டு இவர் தற்கொலைக்கு முயன்றதை உறுதி படுத்துவதாக அமைத்துள்ளது.

மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மது, ஆண்கள் பெண்களை பயன் படுத்தி கொள்கிறார்கள் என்று கூறியதால். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கேங் இவருக்கு எதிராக செயல் பட துவங்கியது.

எனவே, இவர்கள் பேசும் வார்த்தைகள் மது மனதை புண் படுத்தியிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில். உண்மையான காரணம் என என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சி என்ற விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.