பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம், தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. இவர் வெளியேறிய பின் முதல் முறையாக விஜய் டிவி, தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட மிரட்டல் புகாருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சற்று முன் தன்னுடைய குடும்பத்தினருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். குறிப்பாக, விஜய் டிவி தரப்பினர் மதுமிதா மிரட்டல் விடுத்ததாக கொடுத்துள்ள புகாருக்கு பதில் கூறிய இவர்... "என் மீது பொய் புகார் பிக்பாஸ் தரப்பினரிடம் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, நடிகர் கமலஹாசனும், விஜய் டிவி நிர்வாகம் பேசி சுமுகமாக முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பின் செய்தியாளர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், டி.ஆர்,பியை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக உங்கள் மீது இந்த புகார் கொடுத்துள்ளனரா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மதுமிதா, இதுவரை, பிக்பாஸ் தரப்பில் இருந்து போடப்பட்ட எந்த நிபந்தனைகளையும் நான் மீறவில்லை. 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இப்போது தான் வெளியே வருகிறேன். தன் மீது இப்படி ஒரு புகார் ஏன் கொடுத்தார்கள் என்பது தனக்கே புரியவில்லை. டி.ஆர்.பிக்காக கொடுத்தார்களா என்பது தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால் இதுவரை, தான் விஜய் டிவிக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என்பதை மட்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.