நடிகர் உதயநிதி அறிமுகமான, 'ஓகே ஓகே' திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஜாங்கிரி மதுமிதா. இவர் சந்தானத்தோடு நடித்த காமெடி, ரசிகர்கள் பலரை கவர்ந்தது. அந்த காமெடியில் இவரை சந்தானம் கொஞ்சும், ஜாங்கிரி, தேனடை போன்ற வார்த்தைகள் இவருக்கு புனைபெயராகவும் மாறியது.

கடந்த ஆண்டு, உறவினர் ஒருவரையே திருமணம் செய்து கொண்ட இவர், திடீர் என பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது ரசிகர்கள் பலரை அதிர்ச்சியதுடைய செய்தது. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர காரணம், மதுமிதாவுக்கு, அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என கூறப்படுகிறது.

ஆனால், கடந்த பிக்பாஸ் சீசன் போதே இவருக்கு பிக்பாஸ் தரப்பினரிடம் இருந்து அழைப்பு வந்த போதிலும், அதனை ஏற்று கொள்ளாத மதுமிதா, தற்போது கணவரிடம் இருந்து சில காலம் விலகி இருப்பதற்காகவே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பதாக பலர் கூறுகிறார்கள்.

இந்த சந்தேகம் வர முக்கிய காரணம், இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள திருமணம் ஆன பிரபலங்கள், அவர்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளை மிஸ் செய்வதாக கூறுவது உண்டு. ஆனால் மதுமிதா ஒரு முறை கூட அவருடைய கணவர் பற்றிய இதுபோல் எதுவுமே கூறியது இல்லை. எனவே, மதுமிதா ஏதோ மன கஷ்டத்தோடு தான் பிக்பாஸ் வீட்டில் உள்ளார் என ரசிகர்கள் கருதுகிறார்கள். 

ஆனால் உண்மையில் இப்படி கூறப்படும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மதிமிதாவோ அல்லது அவருடைய கணவரோ இதுகுறித்து சொன்னால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.