mathubala daugthers photos leaked

'அழகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக நிலை நிறுத்தியது என்றால் அது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வாரிக்குவித்த 'ரோஜா' திரைப்படம் தான்.

இந்தி, மற்றும் மலையாளத்தில் மாடல் பெண்ணாக நடித்த இவருக்கு, பாவாடை தாவணி போட்டு, பக்கா தமிழ் பெண் வேடத்தில் நடித்த இவருக்கும், நடிகர் அரவிந்த்சாமிக்கும் ரோஜா திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், மதுபாலா மிகவும் பிஸியாக நடிக்க துவங்கியதால் 'மிஸ்டர் ரோமியோ', 'இருவர்' என தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே தநடித்தார்.

திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய திரைபயணத்தை தொடர்ந்த இவர் , தமிழில் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமான 'வாயை மூடி பேசவும் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது மதுபாலா, அருடைய இரு மகள்களுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நடிகை மதுபாலாவிற்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா? என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் எப்போது உங்கள் மகள்களை திரையில் பார்க்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மதுபாலா என்ன சொல்வார் என பொறுத்திருந்து பார்க்கலாம். 

Scroll to load tweet…