பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.இவர், நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டியைக் காதலித்துவந்தார். இதனிடையே சமீபத்தில், தர்ஷன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போது தர்ஷன் தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, காவல் துறையினரிடம் புகாரளித்திருந்தார்.

இது குறித்து விளக்கமளித்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்ததாகவும், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பின்னர், தான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படங்களில் அவரை கதாநாயகியாக்க தன்னை வற்புறுத்தினார் என்றும் தெரிவித்தார்.தர்ஷன்-சனம் ஷெட்டிஅவரை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதோடு, தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியதாகத் தர்ஷன் கூறியிருந்தார். 

மேலும் பிக் பாஸ் ரம்யா திருமணத்திற்கு சென்ற போது, முன்னாள் காதலன் உடன் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறினார். மேலும் முன்னாள் காதலன் நடிகர் அஜயுடன் சனம் ஷெட்டி ஒரு இரவு ரூம் போட்டு தங்கியதால் அவரை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று தர்ஷன் உறுதியாக அறிவித்தார். திரைத்துறையில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள சனம் ஷெட்டி, தர்ஷன் விவகாரத்தை கேள்விப்படும் பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். 

இதனிடையே, நடிகையும், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி, இது குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.அதில், 'தர்ஷன் மீது தவறு உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு உங்களது உண்மையான குறிக்கோள் என்ன என்பதுதான் தெரியவில்லை. உங்களுக்கு அவர் மீண்டும் வேண்டுமா அல்லது அவரைக் கஷ்டப்படுத்த வேண்டுமா? காதலித்த ஒருவர் கஷ்டப்படுவதை எந்த ஒரு காதலியும் விரும்பமாட்டார்கள். உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.