லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் தற்போது வரை நிறைவேறாமல் உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. 

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் நவம்பர் 15 ஆம் தேதி முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்க படவேண்டும் என கூறியுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனாவில் பிரச்சனை குறையாமல் விஸ்வரூபம் எடுத்து வருவதால், திரையரங்குகள் திறக்கபட்டாலும் ரசிகர்கள் வருவார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை. மேலும் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகது என அந்தபடத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டீசர் மாற்று ட்ரைலர் ரிலீஸ் குறித்து, ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், முதல் முறையாக இதுகுறித்து வாய் திறந்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, திரையரங்குகள் திறக்கப்பட்டபின் மட்டுமே முடிவு செய்யப்படும் என்றும், தற்போது படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் தயாராக உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.