தளபதி பிறந்தநாளுக்கு மரண மாஸ் போஸ்டரை வெளியிட்ட 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!
தளபதி பிறந்தநாள் கொண்டாட படுவதை முன்னிட்டு, மாஸ்டர் பட இயக்குனர்... லோகேஷ் கனகராஜ் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இளைய தளபதியில் இருந்து தளபதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென்மாநிலம் முழுவதுமே தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஜூன் 22ம் தேதி நாளை கொண்டாட பட உள்ள பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட தளபதி ரசிகர்கள் தீவிரமாக திட்டம் தீட்டி வந்தனர்.
ஆனால் விஜய்யோ கொரோனா நேரத்தில் மக்கள் அனைவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதால், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர் மன்றங்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ளார். அதே சமயத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் சற்றே அப்செட்டான தளபதி வெறியன்ஸ், சோசியல் மீடியாவிலாவது வேற லெவலுக்கு கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.
அதன்படி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக, மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முதல் ஆளாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தளபதி விஜயின் 46 ஆவது பிறந்தநாளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை அட்வான்ஸாக தெரிவித்துள்ளார். இன்று சரியாக 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் மரண மாஸாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் மேலும், லைக்குகளை குவித்து வருகிறது.
அந்த போஸ்டர் இதோ...