Asianet News TamilAsianet News Tamil

Master : ஓராண்டுக்கு பிறகும் மாஸ் குறையாத மாஸ்டர் ... உலகளவில் பிரபலமான தமிழ் ஹீரோக்கள்...

master got 4th place  : உலக அளவில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் படங்கள் பட்டியலில் மாஸ்டர் படம் 4வது இடத்தை பிடித்திருப்பது குறித்து ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர்.

master got 4th place in world top 10 movies
Author
Chennai, First Published Dec 13, 2021, 8:19 AM IST

உலகளவில் முதல் நான்கு இடத்தை தமிழ் சினிமாக்களை பிடித்துள்ளது.சமீபத்தில் உலக அளவில் பிரபலமான ஐஎம்டிபி தளம் தனது பயனாளிகளின் விருப்பத்திற்குரிய இந்தியாவின் டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னணி நாயகர்களின் 3 தமிழ் மொழி படங்கள் இடம்பெற்றுள்ளது.

அந்த பட்டியலில் 2021ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 29 வரை வெளியான படங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் டாப் 10 படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளது.

master got 4th place in world top 10 movies

அதில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கியது. இந்த படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

master got 4th place in world top 10 movies

அதேபோல இந்த ஆண்டு பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாக உள்ள நிலையிலும் ரசிகர்கள் பார்க்க விரும்பும் படங்கள் பட்டியலில் மாஸ்டர் படம் 4வது இடத்தை பிடித்திருப்பது குறித்து ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர்.

master got 4th place in world top 10 movies

இதனை தொடர்ந்து ஏழாவது இடத்தில் தனுஷின் கர்ணன் படம் இடம் பெற்றுள்ளது. இந்த படமும் உண்மை சம்பவத்தின் தழுவலாகும். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 90 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios