ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமான மர்மர் படத்தின் 2-ஆவது லுக்கை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற "பாராநார்மல் ஆக்டிவிட்டி" மற்றும் "தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்" போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் தீனி போடும் விதத்தில், விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'மர்மர் '.
தற்போது தமிழ் சினிமாவும் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஜானரில் "மர்மர்" திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், மர்மர் திரைப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டேரே திகில் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு படம் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் ஒரே மாதிரியான படங்களை பார்க்க விரும்பாமல், புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு, இந்தப் படம் உறுஆக்கப்பட்டுள்ளது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க இருக்கிறது.
மேலும் இந்தத் திரைப்படத்தை மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் தான் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
