மாரி 2’ படத்தில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதற்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்,

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மீண்டும் டான் ‘மாரியாக தனுஷ் திரும்பியிருப்பதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிசம்பரில் வெளியீடு என்பதையும் போஸ்டரில் உறுதி செய்திருக்கிறது படக்குழு.

வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு, யுவன் இசையமைத்திருக்கிறார். ‘மாரி 2 படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் போஸ்டராக வெளியிடுகிறது படக்குழு. முதலாவதாக, ஹீரோயின் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. ‘அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயா என்ற கதாபாத்திரத்தில், மாநில சட்டம் மற்றும் நீதித்துறையின் இணைச் செயலாளராக அவர் நடித்துள்ளார். டிசம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.