ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் திருநாளையொட்டி கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியானது. இரண்டு படங்களுமே வசூலில் சக்கைப் போடு போட்டன.

இரண்டு படங்களுக்குமே கடுமையான போட்டி இருந்த நிலையில், விஸ்வாசம் படம் வசூலில் பேட்ட படத்தை மிஞ்சியது. இதையடுத்து படத்தின் டிரைலர் வசனங்களை வைத்து இரு தரப்பு  ரசிகர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார்கள் 
.
இந்நிலையில்  இரு படங்களூககு இடையே மீண்டும் ஒரு போட்டி தொடங்கியுள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு யூ டியூபில்  விஸ்வாசம் படத்தின் வேட்டி கட்டு பாடல் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் வெளியிட்ட சில மணி நேரங்களில் 7.06 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களில் 20 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி செம மாஸ் காட்டி வருகிறது.