many fields including cinema field are trapped by corruption of Tamil Nadu - Kamal hassan
தமிழகத்தில் நடக்கும் ஊழலில், திரைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கியுள்ளன என்றும் தமிழகம், ஊழலில் பீகாரை முந்திவிட்டது என்றும் நடிகர் கமல் விலாசியுள்ளார்.
இந்தியா முழுவதும் அமலான ஜி.எஸ்.டி.யால், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மட்டும் திரைப்படங்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், இங்கு, ஜி.எஸ்.டியுடன் கேளிக்கை வரியும் விதிக்கப்படுகிறது
இந்த நிலையில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழகத்தில் திரைப்படம் எடுப்பது, திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல சித்திரவதைகளையும், ஊழல்களையும், திரைத்துறை இந்த ஆட்சியின் கீழ் சகித்துக் கொள்ள உள்ளது.
இந்தப் பிரச்சனையை பொறுத்தவரை, திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட முயற்சிக்கிறேன். அதேவேளையில், சுயநலமிக்க அரசியல்வாதிகளிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.
பக்கத்து மாநிலங்களில், ஜி.எஸ்.டி., வரியை கருத்தில் கொண்டு, கூடுதல் வரிகளுக்கு விலக்கு, சலுகைகள் அளித்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் ஊழலில், திரைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கியுள்ளன.
இந்த ஊழல் விஷயத்தில், பீகார் மாநிலத்தை, தமிழகம் முந்தி விட்டது. இதற்கு எதிராக, இன்னும் வலுவான போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
