நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் நேற்றைய தினம், பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதன் காரணமாக சீமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரை கைது செய்த போலீசார், பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

மேலும் சீமான் போலீசாரை தாக்கியதாக கூறி இவர் மீது மற்ற சில வழக்குகள் போட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியது.

இதனை கண்டிக்கும் வகையில், நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலருடன் சீமானை அடைத்து வைத்துள்ள திருமண மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சீமானை கைது செய்வதென்றால் தன்னையும் கைது செய்யுமாறு கூறினார்.

இவரை சமனாதப்படுத்த போலீசார் எவ்வளவு முயன்றும், கட்சியினர் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து எல்லை மீறியதால், மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவருடன் மற்ற  18 நபர்களையும் கைது செய்தனர். தற்போது அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.