mansooralikhan brother death

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு பேர் போனவர் நடிகர் மன்சூர் அலிகான். திரைத்துறையில் வில்லன் என்று பெயர் பெற்றாலும் மிகவும் நல்ல மனிதர். தன்னால் முடிந்தவரை திரையுலகை சேர்ந்த வர்களுக்கும், சமூகப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது பல படங்களில் வில்லத்தனம் கலந்த காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் அரங்கேறி உள்ள ஒரு சம்பவம் குடும்பத்தினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மன்சூர் அலிகானின் சகோதரர் சாகுல் ஹமீது இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு மன்சூர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மன்சூர் அலிகான் அவர் சகோதரார்கள் மற்றும் குடும்பத்தினர் மீது மிகவும் அன்பு காட்டுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.