mansoor alikhan damage politicians

பல திரைப்படங்களில் வில்லன் நடிகராகக் கலக்கிய நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் தற்போது சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக நின்று குரல்கொடுத்தார்.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் அரசியல் வாதிகள், தான் சம்பாதித்த பணத்திற்கு முறையாக வரி கட்ட மறுக்கின்றனர். ஆனால் சினிமா துறையை சேர்ந்தவர்கள் அப்படி இல்லை. குறிப்பாக நடிகர் அஜித் ஒரு வருடத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் வரி கட்டி வருகிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.