MansoorAliKhan: நீ... மீசை வைத்த குழந்தையப்பா! சென்னை வெள்ளத்தில் படகோட்டி என்ஜாய் பண்ணும் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் (Mansoor ali khan) சென்னையில் விடாமல் பெய்த கனமழையால், வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் அதில் பாட்டு பாடி ஜாலியாக படகோட்டி என்ஜாய் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

Mansoor Ali Khan enjoying in Chennai floods

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் விடாமல் பெய்த கனமழையால், வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் அதில் பாட்டு பாடி ஜாலியாக படகோட்டி என்ஜாய் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் மீண்டும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மீண்டும் சென்னை மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  வீடுகளுக்குள் மழை நீர் புதுந்துள்ளதால், அதனை வெளியேற்ற முடியாமலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வைத்து கொண்டு சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் எவ்வித பலனும் உடனடியாக கிட்டவில்லை.

மேலும் செய்திகள்: Biggboss Tamil 5: 2 மணிக்கு மேல் ஆகியும் வெளியாகாத பிக்பாஸ் ப்ரோமோ! விஜய் டிவி கொடுக்க போகும் சர்பிரைஸ் இதுவா?

 

Mansoor Ali Khan enjoying in Chennai floods

அதே போல் சென்னையில் உள்ள  சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் வெளியில் எங்கும் செல்லமுடியாத சூழலும் நிலவி வருகிறது.  இதனால் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் நிலவரங்கள் மாற்றபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Maanaadu Box Office: அடி தூள்... வசூலில் மாஸ் காட்டும் சிம்புவின் 'மாநாடு'! ஆச்சரியப்படுத்தும் 2வது நாள் வசூல்

ஆனால் பிரபல நடிகர் ஒருவர், மன்சூர் அலிகான் தன்னுடை வீட்டின் அருகே சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தில் படகோட்டி... பாட்டு பாடி மகிழ்ந்து மீசை வாய்த்த குழந்தையாகவே மாறியுள்ளார்.  இந்த வீடியோவில் பிறந்தால் தமிழ்நாட்டுல பிறக்கனும்ம்ம்.... நல்லா சென்னையில தண்ணியில மிதக்கனும்ம்ம்.... இதுதான் வைகை ஆறு., இதுதான் காவிரி, பாலாறு.. என படகில் இருந்து பாட்டு பாடி என்ஜாய் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Mansoor Ali Khan enjoying in Chennai floods

தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே இவர் தலை காட்டி வந்தாலும், 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் பலரது நினைவிற்கும் முதலில் வருபவர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். அதன் பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

மேலும் செய்திகள்:BiggBoss Tamil 5: இந்த வாரம் மிக குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டுக்கு கும்பிடு போட போவது இவரா?

 

Mansoor Ali Khan enjoying in Chennai floods

திரையுலகை கடந்து அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். எனினும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களுக்கும், திரையுலக பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios