தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க பிரச்சனை ஒரு பக்கம் என்றால். சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சனை மற்றொரு புறம் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது புதிய தலைவராக இயக்குனரும், நடிகருமான மனோபாலா பதவியேற்றுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட கடந்த ஆண்டு மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது. இந்த கலை விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவி வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். போஸ் வெங்கட் உள்பட ஒருசில  சங்கத்தில் உறுப்பினர்களும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகரும், இயக்குனருமான மனோபாலா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு நேற்று கூடியதாகவும், இதில் மனோபாலா சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் பொதுச் செயலாளர் ரிஷிகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.