தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கும் கடந்த 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மறுமணமும் செய்து கொண்டனர்.

மனோஜ் கே ஜெயன் ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஊர்வசியும் மறுமணம் செய்து அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி கருத்து தெரிவித்து இருந்த மனோஜ் கே ஜெயன் அவர் மனதில் பட்டதை பளிச்சென போட்டு உடைத்துள்ளார்.

அப்போது..."ஊர்வசி மீது எனக்கு எப்போதும் பகை உணர்வே கிடையாது... அதே சமயத்தில் அவரை எதிரியாக பார்த்ததே கிடையாது... அவ்வப்போது ஊர்வசியின் மகன் எனது மகளை பார்க்க ஆசைப்படுவதாக தெரிவிப்பார். உடனே சென்று பார்த்து வருமாறு தன் மகளிடம் தெரிவித்து அனுப்பி வைப்பேன். ஆனால் என்னை யாராவது எதிரியாக நினைத்தால் அதை பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்பது பற்றி எனது மனைவி ஆஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து என் மீது ஆதீத அன்பு செலுத்துகிறார்.. என்னை மிகவும் நேசிக்கிறார். என் குடும்பத்தையும் நேசிக்கிறார் .என் வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.. என தெரிவித்து உள்ளார் மனோஜ் கே ஜெயன்.