manna vagaiyara film is going to be released to Pongal Wimal in happiness ...
விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘மன்னர் வகையறா’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகர் விமல் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.
பல தயாரிப்பாளர்களிடம் தன் சம்பளத்தை கேட்டு வாங்காமல் ஏமாந்து போயியுள்ளார் விமல். இதன் காரணமாக பெரும் தொகையை இழந்த அவர், இன்னொரு பக்கம் தோல்விப் படங்களிவ் நடித்ததால் மார்க்கெட்டையும் பறிகொடுத்தார்.
இந்த நிலையில் தன்னுடைய ‘ஏ3வி சினிமாஸ்’ என்ற பட நிறுவனத்தின் மூலம் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். பிரபு, சரண்யா, ‘ரோபோ’ சங்கர், ‘யோகி’ பாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘சினிமா சிட்டி’ என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
