மலையாள திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தவர்கள், நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியர் தம்பதியினர்.

இவர்கள் விவாகரத்திற்கு பிறகு திலீப் கடந்த சில மதங்களுக்கு முன் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில்  தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது நடிகை மஞ்சு வாரியாரின் வந்த புது காதல் பற்றித்தான்.

கணவர் தீலிப்பிற்கும் நடிகை காவ்யாவுடன் மறைமுக தொடர்பு இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்தார். ஆனால் முதலில் மறுத்து வந்த இருவரும், திருமணம் செய்து கொண்ட பிறகு, மஞ்சு வாரியாருக்கு பல ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் செய்தனர்.

தற்போது மஞ்சு வாரியார் இந்த 2017 ல் சினிமாத்துறையில் இருக்கும் முக்கிய நபரை திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு  செய்தி மலையாள திரையுலகில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் ஒரு  நிகழ்சிக்கு பேட்டி அளித்த அவரிடம் இது பற்றி கேட்டபோது அதை அவர் முற்றிலும்  மறுத்துள்ளார்.

இது உண்மையல்ல என்றும். இது போல வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் தற்போது நிறைய படங்கள் கையில் இருக்கிறது என்றும் . மிகவும் பிசியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தது தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என ஓபன் டாக் கொடுத்துள்ளார் .