இது சாதாரணமான படம் போல் தோற்றமளிக்கும் அசாதாரணமான படம்! மஞ்சுமல் பாய்ஸ் படம் குறித்து பிரபலத்தின் பதிவு வைரல்

மலையாள படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்' திரைப்படம் பிரேமம் படத்தையே பீட் செய்யும் அளவுக்கு, வசூலில் சக்கைபோடு போடும் நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் அருண் வைத்தியநாதன் போட்டுள்ள முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.
 

manjummel boys director facebook  post mma

மலையாள படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்' சமீபத்தில் வெளியாகி, மலையாள ரசிகர்களை கடந்து, தமிழக ரசிகர்கள் மத்தியில் கூட தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சென்னையில் உள்ள பல திரையரங்குகளில்  இப்படம் ஹவுஸ்  ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இப்படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'குணா' படத்தில் இடம்பெற்றிக்கும் குகையில்... இப்படத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதும், இப்படத்தின் அழுத்தமான கதை களமும் தான் இப்படத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

Regina Cassandra : விரைவில் நடிகை ரெஜினாவுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்!

manjummel boys director facebook  post mma

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும்இப்படம் குறித்து நடிகரும் இயக்குனருமான அருண் வைத்தியநாதன் போட்டுள்ள தற்போது தன்னுடைய முகநூலில் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "மஞ்சும்மல் பாய்ஸ் பார்த்தாகி விட்டது. ஒரு ஆங்கிலப்படத்திற்கு நிகரான திரைக்கதை அமைப்பு, நடிப்பு, இயக்கம். அடுத்த வருடம் எல்லா விருதுகளையும் குவிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. வாழ்த்துகள்.

படம் ஆரம்பிப்பதே கமல்ஹாசன் மற்றும் ரோஷிணியின் குணா காட்சிகளுக்கான ஓவியங்களும், கண்மணி அன்போடு பாடலும் தான். அவ்வப்போது கமல்ஹாசனின் பெயரும், குணா குறித்த வர்ணணைகளும் அழகாக ஊடுருவியிருக்கிறது. குணாவையும், கமல்ஹாசனையும் விடுத்து இந்தப் படத்தை யோசிக்கவே முடியாது !

 

படத்தின் கதாநாயகன் சுபாஷ் கடவுள் மறுப்பாளன். ஒரு உரையாடலில், 'கடவுள் என்றால் என்ன' என்று கேட்கிறான். 'மேலிருந்து இருளைக் கிழித்து வரும் ஒரு ஒளி' என்று நம்பிக்கையாளன் பதில் சொல்கிறான். சுபாஷ் குகைக்குள் பல அடிகள் சறுக்கிக் கீழே, சகதிகளுக்கிடையில் மாட்டிக் கொண்டிருக்க, அவனது நண்பன் தலையில் டார்ச்சோடு இறங்கும் போது...இருளைக் கிழித்து வரும் ஒளி சுபாஷின் கண்களில் புலப்படுகிறது. இறைவன் மிகப் பெரியவன் !

கமல்ஹாசன் எனும் கடவுள் மறுப்பாளர் அபிராமி அந்தாதியில்  முப்பத்து நான்கு வருடத்துக்கு முன் படத்தை முடிக்க, இன்று மஞ்சுமள் பாய்ஸின் மறுப்பாளன் ஒரு இறை சக்தியால் மீட்கப்படுகிறான் என்று குணா முடிந்த இடத்திலிருந்து அந்தாதியின் தொடர்ச்சியாக பாய்ஸ் ஜெயித்திருக்கிறது! சாவைப் பார்த்து விட்டு வந்தவன், கடவுளுக்கு சமானம் என்று ஒரு வயதான அம்மணி, சுபாஷின் கால்களைக் கைகளால் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். We are divine! It's just we don't know that! இது சாதாரணமான படம் போல் தோற்றமளிக்கும் அசாதாரணமான படம். என பதிவிட்டுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios