manju varier try to sucide

சினிமாவில் நடித்து வரும் பிரபலங்களை வெளியில் இருந்து நாம் பார்த்தால், அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர் என்கிற ஒரு தோரணை தான் வெளிப்படும்.

ஆனால் சினிமா பயணம் கானல் நீர் என்பது, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அதே போல் பிரபலங்களுக்கு வாழ்வில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் நடிகை மஞ்சு வாரியார் ஒரு படத்தின் கதாபாத்திரமாகவே மாரி நடித்துள்ளார். 1996ம் ஆண்டு சல்லாபம் படப்பிடிப்பில் நிஜமாகவே அந்த கதாபாத்திரமாக மாறி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் .

இதுகுறித்து அவர் பேசுகையில், சல்லாபம் என்ற படத்தில் நானும், திலீப்பும் காதலர்கள், ஆனால் சில காரணங்களால் பிரிந்துவிடுவோம்.

இதனால் நான் தற்கொலை முயற்சி செய்ய முடிவு எடுக்க இறுதியில் மனோஜ் கே ஜெயன் என்னை காப்பாற்றுவார், இதுதான் கதை.

கதைப்படி ஓடும் ரயில் முன்பு குதிக்க செல்ல வேண்டும் அதற்குள் மனோஜ் வந்து காப்பாற்றுவார். ஆனால் நான் நடிப்பு என்பதை மறந்து கதாபாத்திரமாகவே மாறி ஓடும் ரயிலில் குதிக்க பார்த்தேன்.

நிஜமாகவே தற்கொலை செய்ய முயற்சிக்கிறேன் என்பதை உணர்ந்த மனோஜ் வந்து என் கையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறை கொடுத்தார். அவர் மட்டும் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் அன்றே நான் இறந்திருப்பேன் என்கிறார் மஞ்சு. 

ஒருவேளை இந்த படத்தில் இருந்தே திலீப்பை உண்மையாக காதலிக்க ஆரமித்து விட்டாரோ மஞ்சு