இந்த செய்தியில் டபுள் மீனிங் எதுவும் தேடி அலையவேண்டாம். ஒரே நேரத்தில் அஜீத் நடிக்கும் படத்திலிருந்தும், விஜய் நடிக்கும் படத்திலிருந்தும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தால் யார் படத்துக்கு ஓ.கே. சொல்வீர்கள் என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு நடிகை மஞ்சிமா மோகன் என்ன பதில் சொன்னார் என்ற மிகச் சாதாரணமான செய்திதான் இது.

கேரள பேரழகியான மஞ்சிமா மோகன் சில மலையாளப்படங்களில் நடித்துவிட்டு, தமிழில் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்து இவர் நடித்த ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’ படங்கள் வெல்லாததால் மஞ்சிமா மோகனுக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் வழியாகக் கலந்துகொள்ளும் விருந்தினராக மஞ்சிமா மோகன் கீர்த்தியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது கீர்த்தி ‘சர்ப்ரைசாக உங்களுக்கு அஜீத்,விஜய் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டதற்கு நொடி கூட யோசிக்காமல் ‘விஜய்’ என்று பதிலளித்தார்.

கேரளாவில் எப்போதுமே அஜீத் படங்களை விட விஜய் படங்கள் பெரிய அளவுக்கு ஹிட் அடிக்கக் காரணம் மஞ்சிமா மோகன் போன்ற சேச்சிகள்தான் என்று இந்த பதிலை வைத்துப் புரிந்துகொள்ளவேண்டியதுதான்.