manjima mohan marred aniruth family friend
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த வருடம் சூப்பர் ஹிட்டான "அச்சம் என்பது மடமையடா" படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இவர் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த "சத்ரியன்" படமும் வெற்றிபெற்றதால், இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது உதயநிதிக்கு ஜோடியாக "இப்படை வெல்லும்" என்னும் படத்தில் நடித்து வரும் மஞ்சிமா, அடிக்கடி சென்னையில் உள்ள காபி ஷாப்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் அனிருத்தின் உறவினரான ரிஷிகேஷுடன் வளம் வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. கிசுக்கப்படுகிறது. ரிஷிகேஷ் "வேலையில்லா பட்டதாரி" படத்தில் தனுஷுக்கு தம்பியாகவும், "ரம்" படத்தில் ஹீரோவாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
