'வழக்கு எண் 18/9' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் கொடுத்தவர் மனிஷா யாதவ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

எனவே சமீபத்தில் வெளியான 'சென்னை 600028 - 2' பாகத்தில் 'சொப்பன சுந்தரி' பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இந்த பாடல் செம ஹிட் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது அவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.

ஆனால் மனிஷா யாதவ் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால், எந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லையாம். இவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மாப்பிளை யார் என்பது இதுவரை வெளிவரவில்லை.