இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பம்பாய்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. இதனை தொடர்ந்து கமலுடன் இந்தியன், ரஜினியுடன் பாபா, முதல்வன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதே போல இந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் 50 திற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்த இவர் மீண்டும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சொந்த ஊரான நேபாளில் கனமழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் அதில் சிக்கியுள்ளனர்.

இவர்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு மனீஷா கொய்ராலா ஐக்கிய  நாடுகள் சபையின் மக்கள் நிதியம் என்ற அமைப்பின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் தங்க வைக்க இடம் ஆகியவற்றை செய்துகொடுத்து உதவி வருகிறார். 

மனீஷா எந்த ஒரு தயக்கமும் இன்றி சேர் சகதியில் இறங்கி வேலை செய்வதை பார்த்து நேபாள மக்கள் வியப்பில் உள்ளார்களாம். மனீஷாவின் இந்த செயலை பார்த்த பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்