கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், த்ரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அங்குள்ள அடந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரண்மனை  போல் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்தது. 

ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது. உலகம் முழுவதும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு அடித்து பிடித்து தாயகம் வந்து சேர்ந்தது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட் லைகா தயாரித்து வரும் இந்த படத்தில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது கூட இதுவரை வெளிவராத தகவலாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம்  “ஆதித்த கரிகாலன்” என்ற கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் “மந்தாகினி” மற்றும் “நந்தினி” என்ற இரட்டை வேடத்திலும் நடிக்க உள்ளாராம். 

முதலில் பெரிய பழுவேட்டரையர் ஆக பிரபுவும், சின்ன பழுவேட்டரையர் ஆக சரத்குமாரும் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு பதிலாக பாலாஜி சக்திவேல் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இம்மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. 

 

இதையும் படிங்க: ஜனவரியில் மூன்றாவது குழந்தை... நடிகர் தனுஷ் வீட்டில் விரைவில் விசேஷம்...!

இந்நிலையில் படம் பற்றி சூப்பரான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 20ம் தேதி இலங்கையில் ஷூட்டிங்கை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ள்ராம்.  கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங்கில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.