Maniratnam is going to direct Rajini and Mammootty ...

கடந்த 1991-ஆம் ஆண்டு ரஜினி மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் மணிரத்னத்திற்கு மிகப்பெரிய வெற்றிப் படம்.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இந்த படம் செம்ம ஹிட்டு கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும்? என ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் மீண்டும் தனது படத்தில் மம்முட்டி மற்றும் ரஜினியை நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சி எடுத்து வருகிறாராம். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டையும் மணிரத்னம் தயார் நிலையில் வைத்திருக்கிறாராம்.

மம்முட்டியும், ரஜினியும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், வரும் 2018-ஆம் ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டும் உள்ளராம்.